தளிர் அண்ணா கவிதைகள்



பழுத்த இலைகள் இறந்தகாலத்தை
நினைவுபடுத்துமுன்
துளிர்த்த இலைகள் எதிர்காலத்தை
வரவேற்றன.

அமாவாசை இரவில்
மின்மினிப்பூச்சிகள்
உலகம் இருண்டுவிடவில்லை!


கெஞ்சி வாங்கிய பழத்தை
சகாவுக்கு பங்கிடும் சிறுவன்
ஈகையின் இலக்கணம்.

பலூன் விற்பவனின் பலூன்களில்
நிறைந்திருப்பது காற்று அல்ல
அவன் குடும்பத்து ஒருநாள் உணவு.

எழுத்து.
மனமும் மசியுமிணைந்து
காகித தொட்டிலில்
பிரசவித்த குழந்தை!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!