+2 tips


+2 தேர்வெழுதும் மாணவ மணிகளுக்கு சில டிப்ஸ்.

#அதிகாலை படிப்பு அதிக மதிப்பெண் தரும் அதிகாலையில் மூளை சுறுசுறுப்பாய் இயங்குவதால் படிப்பது மனதில்நன்றாக பதியும்.

#இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள் .நீண்ட நேரம் இரவில் கண்விழிப்பதால் உடலும் மனமும் சோர்வடையும்.

# பாடங்களை மக்கர் செய்யாமல் புரிந்து படியுங்கள்.

#கூடுமானவரை பாடபுத்தகத்திலேயே படியுங்கள். ஆசிரியர் தரும் குறிப்புகளைகவனமாக படியுங்கள்.கைடுபடிப்பதை கூடுமானவரை தவிருங்கள்.

#படிப்பதற்கு இடைஇடையே ப்ரேக் விடுங்கள் அப்பொழுது உங்களூக்கு பிடித்தமான இசை கேட்பது ,விளையாட்டு,புத்தகம் வாசித்தல் போன்றவை உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்யும்.

#தொடர்ந்து கடினமான பாடங்களயே படிக்காமல் ஈசியான பாடங்களயும் கலந்து படியுங்கள்.படிப்பதற்கு சோம்பல் வராது.

#தேர்வுக்கு கிளம்புமுன் முன் கூட்டியே பேனா 2.பென்சில் சார்ப்பனர், ரப்பர் ஸ்கேல் பேட், ஹால் டிக்கெட் முதலியவற்றை பத்திர்மாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கடைசி நேர பரபரப்பை தவிர்க்கவும்.

#நல்ல ஊட்ட சத்து மிகுந்த உணவுககளயே உண்ணவும். கடை திண்பண்டங்களை உண்பதை தேர்வு முடியும் வரை தவிர்க்கவும்.முக்கியமாக எண்ணெய் பண்டங்கள் உண்பதை தவிர்க்கவும்.

#தேர்வு அன்று காலை படித்ததை ஒருமுறை ரிவிசன் செய்யவும்.

#தேர்வு ஹாலில் பரபரப்பின்றி பயமின்றி விடைத்தாளை பூர்த்தி செய்யவும். பின்னர் வழங்கப்படும் வினாத்தாளை ஒருமுறை நிதானமாக வாசிக்கவும். பின்னர் விடையளீக்க தொடங்கவும்.

# முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடையளிக்கவும்.அதற்காக பிரிவு மாற்றி பிரிவு தாவி விடையளிக்க வேண்டாம் இது திருத்துபவரை எரிச்ச்லூட்டும்.

#தேர்வு அறையில் மற்றவர் சொல்லி தரும் விடைகள் தவறாக கூட இருக்கலாம் எனவே நீ சரியென நினைக்கும் விடைக்கே முதலிடம்கொடு.

#எழுதி முடித்தபின் ஒருமுறை சரி பார்த்துவிட்டு தாள்களை ஒழுங்காக கட்டி கண்காணிப்பாளரிடம் தரவும்.

# தேர்வு முடிந்த பின் அதை பற்றி பேசுவது விடைகளை சரிபார்ப்பது போன்ற செயல்கள் வேண்டாம் அது அடுத்த தேர்வை பாதிக்கும்.

# வெற்றிபெற வாழ்த்துக்கள் (நாளை தமிழ் முதல் தாள் முக்கிய வினாக்கள்)

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2