நான் ரசித்தப் பூக்கள்

நான் ரசித்தப் பூக்கள்

ஒரு நகைச்சுவை மண்றத்தில் ஒரு பேராசிரியர் சொன்னார் மாணவர்களிடம் நாம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும் அதுவும் அவர்கள் கேள்வி கேட்கும் போது உஷாராக பதிலளிக்க வேண்டும் ஏனென்றால் பதிலுக்கேற்ற கேள்வி தயாராக வைத்திருப்பார்கள். அப்படித்தான் ஒரு மாணவன் என்னிடம் கேட்டான் சார் ராவணணுக்கு எத்தன தலை? என்று  பத்து தலை என்று பதிலளித்தேன் அப்புறம் அவன் கேட்டான். அந்த பத்தும் சுத்தி இருக்குமா லைனா இருக்குமா சார்?
லைனா ஒன்றன்பின் ஒன்றாகத்தான் இருக்கும்பா என்றேன். அப்ப இராவணன் எப்படி சார் ஒருக்களிச்சு படுப்பான்னு கேட்டான் பாரு ஒரு கேள்விய என்றபோது அரங்கமே அதிர்ந்தது.இன்னொருவர் சொன்னார்  ஒரு ஊருக்கு பட்டி மண்றத்திற்கு சென்றாராம் வழியெல்லாம் புதர் காடாக இருக்க ஏம்பா இப்படி புதரா இருக்கே பூச்சி பொட்டு அண்டாதா என்று உடன் வந்தவரிடம் கேட்டாராம் அதற்கு அவன் சொன்னானாம் ஒன்னும் பயப்படாதீங்க அதான் நிறையா பாம்புங்க கிடக்கே பூச்சி பொட்டுங்க அண்டாதுன்னு.அவரே மேலும் சொன்னார்,ஒரு ஊரில் நகைச்சுவை மன்றத்திற்கு போய் ஒரு நகைச்சுவை ஒன்றை எடுத்து விட எல்லோரும் சிரித்தனராம் உடனே ஒரு கிழவி எழுந்து நின்று கத்தியதாம் சார் ஏதோ பேசிக்கிட்டிருக்காரு நீங்க பொறுப்பில்லாம சிரிச்சுகிட்டு இருக்கிங்களே!.

படித்து ரசித்தது!

பழைய ஜூனியர் விகடன் இதழொன்றில் படித்தது.
டயலாக் பகுதியில் சொல்லுங்கோ மாமிஎன்ற தலைப்பில் வெளியான டயலாக்
“சாவித்திரிக்கு வர்ர ‘ஜூன்’லயா கொழந்த பொறக்கறது?”
“ஆமாம் ஜூன் 16ன்னு தேதி குறிச்சிருக்கா!’
“அவளுக்கு பையந்தான் பொறக்கும்னு நேக்குத் தோணறது....ஏன்னா அவ நன்னா கறுத்துப்போயிட்டா...இன்னொன்னு மொகம்கூட சித்த ஆம்பளத்தனமா ஆயிண்டு வருது பார்த்தியோ?”
“எதையாவது உளறிக்கொட்டாதே... இதெல்லாம் யார் சொன்னது...?”
“எங்க ஓர்ப்படிதாண்டி! அதே மாதிரி பொம்பள புள்ள பொறக்கிற சமயத்துல புள்ளதாச்சி மொகம் அழகாஆயிடுமாம் பொண்ண பெத்தவங்கறதாளே சொல்றேன்!”
“பரவாயில்லயே நோக்கும் அழகாறதுக்குப் பகவான் ஒரு சான்ஸ் தந்தானே!”


சுபா எழுதிய முரட்டுக் குதிரை நாவலில் வந்த ஒரு பொன்மொழி என் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டுள்ளது.அது இதுதான். “ எந்த தருணத்தை கம்பளிப்பூச்சி உலகமே முடிந்து விட்டதாக பார்க்கிறதோ அந்த தருணத்தை பட்டாம் பூச்சியின் ஆரம்பமாக பார்க்க கற்றுக்கொள்!”


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!