திசை மாறும் திமுக!

திசை மாறும் திமுக!

லோக்பால் வரைவு மசோதா குறித்து மத்திய அரசுக்கும் அன்னாஹசாரே தரப்புக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இதுவரை இந்த பிரச்சனையில் தனி ஆவர்த்தனம் செய்த காங்கிரஸ் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது.
   திகார் சிறையில் வாடும் மகளை காண வந்த கருணாநிதி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கம்போல திமுக வின் பிரதிநிதியாக டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் லோக்பால் வரைவில் பிரதமரைக் கொண்டுவருவதை எதிர்த்தன. அப்படி கொண்டு வருவதால் பிரதமர் பதவியின் கவுரவம் பாதிக்கப்படும் என்று சொன்னதுடன் மாநிலங்களில் கொண்டுவரவுள்ள லோக் ஆயிக்தா சட்டத்தையும் கடுமையாக எதிர்த்தன.
   கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு குறித்து காங்கிரஸ் மகிழ்ந்த வேளையில்  திமுக பிரதிநிதியான டி.ஆர். பாலு பேசும்போது லோக்பால் வரைவில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுமானால் நேர்மையானவராக இருக்கலாம். எதிர்காலத்தில் வரும் பிரதமர்கள் அவ்வாறிருப்பார்களா என்பது சந்தேகமே! லோக்பால் சட்டம் என்பது இப்போதைக்கு மட்டுமல்ல நீண்டகாலம் இருக்கக்கூடியது. எனவே எதிர்காலத்தையும் யோசித்து பார்க்கவேண்டும் பிரதமர், நீதித்துறைஉள்ளிட்ட நீதிபதிகளையும் இந்த சட்ட வரையறையில் சேர்க்க வேண்டும். என்றார்.
   மேலும் அவர் கூறுகையில் மாநில அளவில் லோக் அயுக்தா அமைப்பு கண்டிப்பாக அமைக்கபடவேண்டும்  தமிழகத்தில் கூட மாநில அளவில் லோக் அயுக்தா அமைப்பை கருணாநிதி கொண்டு வந்தார். ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் விசாரணைக்கு ஆளாகும் போது பிரதமர் பதவியில் இருப்பவர்களை மட்டும் விதிவிலக்காக பார்க்கத் தேவையில்லை. அதே போல் சுப்ரீம் கோர்ட்,ஐகோர்ட் நீதிபதிகளை லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் . இன்றைய சூழ்நிலையை வைத்து மட்டுமே இந்த பிரச்சனையை பார்க்கக் கூடாது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு  பிரதமர் பதவியை இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வருவதே சரி என்று பேசினார்.
   லோக் பால் மசோதாவில் ஐ. மு கூட்டணிக் கட்சிகளின் பிற கட்சிகளிலிருந்து வேறுபட்டு நிற்பது இந்த பேச்சினால் தெளிவாகியுள்ளது. இதுவரை காங்கிரஸுக்கு போட்டு வந்த தாளம் மாறியுள்ளதால் பிற கூட்டணிக் கட்சிகளுக்கும் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.
  ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்களை முழுவதுமாக வஞ்சித்து விட்ட காங்கிரஸை பழிவாங்கவே இந்த முடிவை திமுக எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இருப்பினும் பார்லிமெண்டிலோ அல்லது அனைத்துக் கட்சி கூட்டத்திலோ இந்த கருத்தினை திமுக பகிரங்கமாக வெளிப்படுத்துமானால் நிலைமை மேலும் சிக்கலாகும் என தெரிகிறது.
   கவிதை எழுதி பிழைத்துக் கொண்டிருந்த கனிமொழியை அரசியல் ஆசை ஸ்பெக்ட்ரம் படுகுழியில் தள்ளிவிட்டது. குழியிலிருந்து மீட்க கருணாநிதியின் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. கடைசியாக கனிமொழியை சந்தித்த கருணாநிதியின் கண்களில் தண்ணிர் தாரையாய் பெருக்கெடுத்ததாம்.
  இப்படித்தானே இலங்கைத் தமிழர்களும், தா. கிருட்டிணன் வீட்டாரும் ஏன் இவர் அன்னை என்று அழைக்கும் சோனியா குடும்பத்தினரும் அன்று அழுதிருப்பார்கள். இவர் மறந்திருந்தாலும் சோனியா அதை மறந்திருக்க மாட்டார். ராஜ தந்திரியான கலைஞரே இன்று சோனியா விரித்த வலையில் விழுந்து மாட்டிக் கொண்டு தவிக்கிறார்.
   அதிலிருந்து மீளத்தான் இப்படி ஒரு எதிர்மறையான நிலையை எடுத்துள்ளார் என காங்கிரஸுக்கும் தெரியும். பனங்காட்டு நரியான அது இந்த சிறு சலசலப்புக்கெல்லாம் அஞ்சுமா என்பது இனிமேல் தான் தெரியவரும்.
   அதுவரை கலைஞர் இது போல சில சித்துக்களையும் தோல்விக்கு காரணங்களையும் பதில் அறிக்கைகளையும் தயாரித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! பதிவு பிடித்து இருந்தால் நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!


Comments

  1. தி மு க வினால் காங்கிரஸ்சிற்கு எந்த லாபமும் இல்லை. ஆனால், காங்கிரஸ் சினால் தி மு க விற்கு ஆதாயம் நிறைய. அதனால், அவ்வப்போது இந்த மாதிரி 'நானும் ரௌடிதான்' அப்படின்னு கூவிக்க வேண்டியது தான்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!