இப்படியும் சில மனிதர்கள்!


இப்படியும் சில மனிதர்கள்!

இப்படியும் சில மனிதர்கள் இந்த தலைப்பில் நான் சந்தித்த சில வித்தியாசமான மனிதர்களை பற்றி பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இது யார் மனதையும் புண்படுத்தாவண்ணம் அமையும் என்றே எதிர்பார்க்கிறேன். இது ஒரு தொடர்பதிவாக அமையும், என் வாழ்வில் இந்த மனிதர்களின் நட்பும் பிரிவும் பாதித்த விஷயங்களை பகிரப் போகிறேன். சில நபர்களின் பெயர்களை மட்டும் மாற்றி வெளியிட உள்ளேன்.அவர்களின் வசதிக்காக!.

இப்படியும் சில மணிதர்களில் முதலாவதாக!
1.    பண்டாரக் கதிர்.
தலைப்பில் ஜாதியை புகுத்திவிட்டானே என்று ஏ.ஆர்.ராஜகோபாலன் கோபிக்கவேண்டாம்.ஊரில் எல்லோரும் அவனை அப்படித்தான் அழைப்பார்கள். ஆனால் அவனு(ரு)க்கு வயது 45 இருக்கும். கதையின் சுவாரஸ்யத்திற்காக வழக்கமான மரியாதைப் பண்புகளை தவிர்த்துவிட்டு எழுதப் போகிறேன்.யாரும் கோபிக்கவேண்டாம்.
   பண்டாரக் கதிர்! இந்த நபரை பற்றி முதலில் ஏன் எழுதவேண்டும்? அவர் செய்தவேலை எழுதவைத்துவிட்டது. விநாயகர் சதுர்த்தி முடிந்த இரண்டுநாளில் சனிக்கிழமையன்று மாலை கதிர் ஊருக்கு வந்திருக்கிறான். ஊரில் புதியதாக அமைந்துள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்று அங்கு ஸ்வாமிக்கு அணிவித்திருந்த புதிய வஸ்திரங்களை கழற்றி எடுத்துச் செண்றுவிட்டான். மாலை ஆறுமணிக்கு தீபமிட சென்ற குருக்கள் வஸ்திரம் காணாமல் போனதை நிர்வாகியிடம் போன் செய்தார். நிர்வாகி யார் எடுத்திருப்பார் என்று கேட்க கதிர் ஊருக்குள் வந்தானா? என்றார் குருக்கள்
   ஆமாம் சாமி என் வீட்டுக்கு வந்து பழைய துணிகளை கேட்டான். நாளைக்கு வரும்படி கூறினேன் என்றார் நிர்வாகி அப்படியானால் அவன் தான் எடுத்திருக்க வேண்டும் கன்னிகைப் பேரில் தங்கியிருப்பான். போனால் பிடித்து வஸ்திரங்களை மீட்டுவிடலாம் என்றார் குருக்கள்.
 போனார்கள். வஸ்திரங்களையும் மீட்டுவிட்டார்கள். ஆனால் கோயில் துணிகளை திருடவேண்டிய அளவுக்கு கதிருக்கு துணிகள் மீது அபார காதல் ஏன்? அது புரியாத புதிர்!
      கதிர் ஒரு முழுமையான வளர்ச்சி அடைந்த மனிதன் அல்ல தெய்வத் திருமகள் கிருஷ்ணா போன்றதொரு பாத்திரம்.அவன் பிறந்தது பண்டார சமூகத்தில்.அனைவரும் பண்டாரக் கதிர் என்றே அழைப்பார்கள்.சிறுபிள்ளைகள் கூட அப்படித்தான் அழைப்பார்கள்! அதைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை.
   அவனுக்கு வேண்டியது முழுதாய் மூன்று வேளைச் சாப்பாடு! மூட்டை நிறைய துணிமணிகள். கதிர் இவ்வாறு துணிகள் திருடி அடி வாங்குவது இது முதல் முறையல்ல! பல முறை அவனுக்கு துணிகள் மீது அவ்வளவு ஆர்வம். ஆனால் அதை பாதுகாத்து வைக்கமாட்டான். புது துணிகள் வந்ததும் பழைய துணிகள் தீக்கு இரையாகும்.
   அவனது அண்ணன்கள் இருவர் பூ வியாபாரம் செய்து வந்தனர். இருவரும் இறந்துவிட்டனர்.ஒரு தம்பி அவனுக்கு கல்யாணமாகி திருமண வயதில் பெண் உள்ளது. அவனும் ஒரு அரை குறை மன நோயாளிதான்.
பண்டாரம் என்போர் கோயில் பெருக்கி சுத்தம் செய்து தீபமேற்றி கோயில் கைங்கர்யம் செய்து வருவார்கள் அதற்கென ஊரில் தனி மான்யங்கள் ஒதுக்கி இருப்பார்கள் .
  காலப் போக்கில் மான்யங்கள் பறிபோய் சம்பளத்திற்கு உழைத்தார்கள். தற்போது அந்த சிறு சம்பளமும் ஒழுங்காக கிடைக்காததால் வேறு பணிகளுக்கு சென்று விடுகின்றனர்.
  கதிர் முதலில் கோயில் பணி செய்து கொண்டிருந்தான். அவனுக்கு பெண்கொடுக்க யாரும் முன்வராததால் அவனது தம்பிக்கு திருமணம் செய்துவைத்தனர். அதுவே அவனை மேலும் பாதித்தது. அண்ணனைவிட்டு தம்பிக்கு கல்யாணம் செய்து விட்டாள் எங்காத்தா! என்று பச்சை பச்சையாக திட்டிப் பேசுவான். வீட்டில் அவனுக்கு போடும் உணவு பத்தாது. நல்ல உழைப்பாளியான அவன் சாப்பாடும் நிறையவே சாப்பிடுவான். ஆனால் அவன் தாயோ கருமி! மூன்று பேருக்கு ஆழாக்கு அரிசி உலையே வைப்பாள். இவன் ஒருவனே உழக்கு சாதம் சாப்பிடுவான்.
   பாவம் கதிர்! இந்த உணவு பத்தாததால் ஊரில் வீடு வீடாகச் சென்று பழையது சாப்பிடுவான் அவர்கள் சொல்லும் வேலைகளை செய்வான். எங்கள் வீட்டு திண்ணையில் தங்கிக் கொள்வான். அப்போது அறுவடைக்கு மிசின் இல்லாத காலம். நெல் அறுவடைக்கு இவனை போட்டி போட்டு அழைத்துச் செல்வார்கள். நிமிர வேலை வாங்கிக் கொண்டு உணவை போட்டு அனுப்புவார்கள். அப்புறம் கதிர் சற்று தெளிவாகி கூலி வாங்க ஆரம்பித்தான்.
   அதை கொண்டு தானே  சமைத்து உண்ண ஆரம்பித்தான். அதிலும் அவன் தாய் பங்குக்கு வர ஆரம்பித்தாள். நாங்களும் திண்ணையை இடித்து ரூமாக மாற்றிவிட்டோம். கதிர் தங்குவதற்கு இடமில்லாமல் போய்விட்டது.
 அப்போதே கதிருக்கு துணிகள் மீது ஆர்வம் பக்கத்து ஊரில் ஒர் ஐயர் வீட்டில் சட்டை திருடி உதைபட்டு வந்தான். சரி சட்டை திருடியதோடு விட்டால் பராவாயில்லை! கோயிலில் அர்ச்சகர் தட்டிலிருந்த சில்லறைகளையும் ஒருமுறை எடுத்துவிட உஷாராகி அவனை எங்கள் வீட்டில் சேர்ப்பதில்லை என்று விரட்டினோம்.

  கதிருக்கு என்ன தோன்றியதோ கண்ணிகைப் பேர் போய் சேர்ந்துவிட்டான். இப்போது அவனது தொழில் தாரை ஊதுவது! இழவு எங்கு நடந்தாலும் அங்கு கட்டாயம் காணலாம் அழுக்கேறிய பரட்டைத் தலை!கறைபடிந்த பற்கள்! பீடி புகைத்து கருத்த உதடுகள் என அழுக்கேறிய வேட்டி சட்டையுடன் பவனி வருவான். இங்கிருக்கும் வரை அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்தது துணீ திருடுவதை தவிர! இப்போது குடிக்கிறான்.புகைபிடிக்கிறான்.அத்துடன் பணமும் திருடுகிறான். துணியை திருடுவதையும் விடவில்லை!
  அனாயாசமாக நாள் முழுதும் வேலை செய்தவன் இன்றோ ஒருமணி நேரம் வேலை செய்வதற்குள் களைத்துப் போகிறான். காரணம் குடி!
இதற்கெல்லாம் காரணம் அவனுடைய தாய்!அவளுடைய வளர்ப்பு!
ஒரு தாயே பிள்ளையை சரிவர வளர்க்கமுடியும். அதுவும் தகப்பன் இல்லா நிலையில் அவள் வளர்ப்பு சரியாக இருந்திருக்க வேண்டும்!அவள் தவறினாள். பிள்ளையும் குலத்தொழிலை மறந்து இழவு வீடுகளில் தாரை ஊதி கெட்டுப் போகிறான். ஆங்காங்கே துணி திருடி உதை பட்டு வாழ்ந்து வருகிறான்.
    இவனுக்கு எப்படி துணிகள் மீது இவ்வளவு ஆர்வம்? என்பது இன்னும் புரியாதபுதிர் தான்!.
மற்றுமொரு சமயம் வேறொரு மனிதரை பற்றி பகிர்ந்துகொள்கிறேன்! அதுவரை விடைபெற்றுக் கொள்கிறேன்!.
 டிஸ்கி!  கடுமையான ஜுரம் காய்ச்சி எடுக்கிறது! என்ன டைப் செய்கிறேன் என்பதே தெரியவில்லை! பதிவில் ஏதாவது பிழைகள் காணின் பொறுத்தருள்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. முதல்ல உடம்பை பாருங்க பாஸ்...

    ReplyDelete
  2. கோவை நேரம் said...

    முதல்ல உடம்பை பாருங்க பாஸ்...
    September 6, 2011 6:56 AM

    நன்றி நண்பரே! வருகைக்கும் விசாரிப்பிற்கும்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!