குண்டு பெண்களுக்கான அம்சமான உடைகள்!

ஜவுளிக் கடையில் குண்டான பெண்கள் தங்களுக்கான உடைகள் கேட்க சற்று கூச்சப்படுவார்கள். இனி கூச்சமே வேண்டாம். குண்டான பெண்களுக்கான உடைகளைத் தயாரிப்பதில் பேஷன் துறை தீவிரம் காட்டி வருகிறது. குண்டான பெண்களும் ஸ்டைலாக உடை அணியலாம். சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்தால் குண்டான பெண்கள் அழகாகத் தெரிவார்கள்.

குண்டு பெண்களுக்கான அம்சமான உடைகள்:

1. நீளமான உடைகள்

இறுக்கமான உடைகளை அணியக்கூடாது. சிறிது இறுக்கமில்லாத கோடு போட்ட ஆடைகளை அணிய வேண்டும். தாய்மை அடைந்த பெண்கள் அணியக்கூடிய ப்ராக்குகள் இப்போது பேஷனாக வருகின்றன.

2. டியுனிக்

இது ஒரு சிறந்த மேலாடையாகும். மற்ற இறுக்கமான மற்றும் குட்டையான மேலாடைகள் பருமனான உடலை மேலும் பெரியதாகக் காட்டும். ஆனால் டியுனிக் ஆடைகள் கழுத்துப் பகுதியில் சற்று இறுக்கமாக இருந்த பின் கீழே இறுக்கமில்லாமல் இருக்கும். எனவே அது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

3. பப் ஸ்லீவ்ஸ்

பருமனான கைகள் இருந்தால் கையில்லாத அல்லது இறுக்கமான கையுள்ள மேலாடைகளை அணியக்கூடாது. ஆனால் பப் ஸ்லீவ்ஸ் உள்ள மேலாடைகள் பருமனான கைகளை மறைத்துவிடும். எனவே பப் ஸ்லீவ்ஸ் உள்ள குர்தாஸ், டியுனிக் மற்றும் ரவிக்கைகள் அணியும் போது மிக ஸ்டைலாகத் தெரியும்.

4. சல்வார்

பருமனான பெண்களுக்கு சுரிதார்களை விட சற்று இறுக்கமில்லாத சல்வார்கள் மிக அருமையாக இருக்கும். உங்களது கால்கள் சற்று தடிமனாக இருந்தால் பாட்டியாலா சல்வார்களை அணியலாம். இப்பொழுதெல்லாம் கரினா கபூர் முதல் நமது அனுஷ்கா ஷர்மா வரை அவற்றைத்தான் அணிகிறார்கள். எனவே நீங்களும் அணிந்து பார்க்கலாம். நன்றாக இருக்கும்.

5. பூட் கட் ஜீன்ஸ்

இப்பொழுது இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் ஜெக்கிங்கள்தான் பேஷனாக இருக்கின்றன. தடிமனான பெண்கள் அவற்றை அணிந்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால் அவர்கள் லேட்டஸ்ட் பேஷன் ஆடைகள் அணிய முடியாது. ஆனால் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் பூட் கட் ஜீன்ஸ்களை அணியலாம்.

6. புடவைகள்

புடவைகள் எல்லா வகையான பெண்களுக்கும் அம்சமாக இருக்கும். அதற்காக பருமனான பெண்கள் ஷிபான் அல்லது ஜார்ஜெட் புடவைகளை அணியக் கூடாது. மாறாக காட்டன் மற்றும் பாரம்பரிய பட்டுப் புடவைகளை அணிந்தால் மிக எடுப்பாக இருக்கும்.

நன்றி தட்ஸ் தமிழ்!
தங்கள் வருகைக்குநன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!