அஸ்வின்- ஓஜா! புதிய சுழல் கூட்டணி!

அஸ்வின்- ஓஜா!  புதிய சுழல் கூட்டணி!

   இந்திய கிரிக்கெட்டிற்கு புதிய திறமையான இரு சுழல் பந்து வீச்சாளர்கள் கிடைத்துள்ளனர். இது நல்ல எதிர்காலத்தை காட்டுகிறது. இந்திய அணியில் ஒரு காலத்தில் சுழல் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பிஷன் சிங்க் பேடி சந்திர சேகர் பிரசன்னா, வெங்கடராகவன், போன்றவர்கள் சுழல் பந்தில் ஜாம்பவான்களாக திகழ்ந்தார்கள்.
    இந்த ஜாம்பாவான்கள் காலத்திலும் இந்தியா பெரிய வெற்றிகளை சுவைக்கவில்லை. ஆனாலும் இவர்களின் பந்துகளை எதிர்கொள்ள உலகின் முன்னனி பேட்ஸ்மேன்கள் பயந்தனர். அந்த அளவிற்கு இவர்களும் இந்திய பிட்ச்களும் சுழற்பந்து வீச்சாளர்களின் சொர்கமாக இருந்தது.
   ஆனால் இவர்களின் காலத்திற்கு பின்னர் சுழற்பந்து வீச்சில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. இதை கும்ப்ளே-ஹர்பஜன் கூட்டணி போக்கியது. இவர்கள் இருவரும் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக பயன் படுத்தப்பட்டனர். கும்ப்ளேவின் லெக்-ஸ்பின்னும் ஹற்பஜனின் ஆப்-ஸ்பின்னும் எதிரணி வீரர்களை திக்குமுக்காட செய்தன. விக்கெட் வேட்டை நடத்திய இவர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக  திகழ்ந்தனர்.
        இப்போது இந்திய அணிக்கு தோனி கேப்டனானது ஏறுமுகம் ஆனது. உலகின் நம்பர் ஒன் அணியாக ஒரு வருடம் வலம் வந்தது. இதற்கு அணியின்கூட்டு முயற்சியோடு இந்த இரு நபர்களின் பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் எதிரணியின் பத்து விக்கெட்களை வீழ்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது அதை செவ்வனே  ஜாகிர்கானுடன் இந்த கூட்டணி இனைந்து செய்தது.
   இதனால் இந்திய அணி வெற்றி மேல் வெற்றிகளை குவித்தது.இந்த நிலையில் கும்ப்ளேவின் ஓய்வு இந்திய அணியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இந்திய சுழல் பந்து தாக்குதல் பலவீனமடைய ஆரம்பித்தது அப்போதுதான். ஹற்பஜனும் பார்ம் இன்றி தவிக்க இங்கிலாந்தில் அடி மேல் அடி வாங்கி திரும்பியது நம் இந்திய அணி.
    இந்த சூழலில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக ஒரு துணிச்சலான முடிவை எடுத்தது இந்திய தேர்வுக்குழு. பார்ம் இன்றி தவித்த ஹர்பஜனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிரக்யான் ஓஜா- அஸ்வின் ஆகிய இரு இளைஞர்களுக்கு வாய்ப்பு தந்தது.
    இந்த இருவரும் போட்டி போட்டு விக்கெட் வேட்டை நடத்தியதில் வெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா. அதிலும் தமிழகத்தின் அஸ்வின் ஆல்ரவுண்டராக அசத்தி 22 விக்கெட்களையும் 121 ரண்களை ஒரு சதம் உட்பட எடுத்து தொடர் நாயகன் விருது வென்றார்.
   இவர்களின் சிறப்பான ஆட்டம் ஆஸ்திரேலியாவிற்கெதிரான தொடரிலும் வாய்ப்பினை பெற்றுத் தந்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் சிறப்பாக செயல்படக் கூடியவர் ஹர்பஜன். அவருக்கு வாய்ப்பில்லாமல் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு காரணம் அவரது திறமை. டிவெண்டி 20 போட்டிகளில் அசத்தி ஒரு நாள் அணியில் வாய்ப்பு பெற்றார். இப்போது டெஸ்ட் அணியிலும் அசத்தி கேப்டனின் நம்பிக்கையையும் தேர்வாளர்களின் நம்பிக்கையையும் பெற்றுவிட்டார்.
   இவரது புதுமையான கேரம் பால் பந்து வீச்சு எதிரணியினரை திணரடிக்க வைக்கிறது. சூழ்நிலைக்கேற்றவாறு பந்துகளை வீசி விக்கெட் சாய்ப்பதில் கில்லாடியாக இருக்கிறார். இவருக்கு இணையாக திறமையாக பந்து வீசி எதிரணியினரை திணர அடிக்கிறார் ஓஜா.
   இந்த இருவரும் திறமையாக பந்து வீசி இந்தியாவை ஆஸ்திரேலியாவிலும் வெற்றிப்பாதைக்கு கூட்டிச் செல்வார்கள் என்று எதிர்பார்ப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2