புதிய 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் எல்ஜி!

அசர வளர்ச்சி கண்டு வரும் மொபைல் உலகில் புதிய தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இதனால் புதிய புதிய தொழில் நுட்பங்களை கொடுப்பதில் ஒவ்வொரு நிறுவனமும் தனது தனி தன்மையை காட்டி வருகிறது.
எல்ஜி நிறுவனமும் அப்படி தனது தனி தன்மையை நிரூபித்து ஒரு தனி முத்திரையை ஏற்படுத்தி உள்ளது. எக்லிப்ஸ் என்ற புதிய 4ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது எல்ஜி நிறுவனம்.
இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.5 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டுள்ளது. இதனால் உயர்ந்த தொழில் நுட்பத்தினை பெறுவதும் எளிதான காரியம்.


இதன் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் எம்எஸ்எம்8255 1ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸர் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் கியூவர்டி கீப்பேட் வசதியினையும் பெற்றுள்ளது.
இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தாலும் சுலபமாக இயங்கும். எல்ஜி எக்லிப்ஸ் 4-ஜி மொபைல் 3.5 இஞ்ச் பெரிய மல்டி திரை வசதியை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இரண்டு மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது. 3.1 மெகா பிக்ஸலில் ஒரு கேமராவும், 0.3 மெகா பிக்ஸலில் செகன்டரி கேமராவும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி பற்றியும் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 1,500 எம்ஏஎச் ரிமூவபுல் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 5.5 மணி நேரம் டாக் டைம் வசதியினையும், 14 நட்கள் ஸ்டான்-பை டைமினையும் பெற முடியும்.
இந்த ல்மார்ட்போன் 3ஜி வசதிக்கும் சப்போர்ட் செய்யும் திறன் கொண்டது. மெமரி வசதி மிகவும் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிகிறது. இதில் 1ஜிபி வரை இன்டர்னல் வசதியினையும், 32ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்தி கொள்ளும் வசதியினையும் பெறலாம்.
மைக்ரோ யூஎஸ்பி வி2.0 பயன்படுத்தப்பட்டுள்ளதால், தகவல்களை எளிதாக பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். இந்த புதிய மொபைலான எல்ஜி எக்லிப்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் சிறந்த தொழில் நுட்பத்தையும் வழங்கும்.

நன்றி தட்ஸ் தமிழ் 

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2