அரசு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை 3 மணி நேரத்தில் நோயாளி உயிரை மீட்ட அரசு மருத்துவர்கள்

சென்னை: மரணம் உறுதி என்று கருதப்பட்டவரை, மருத்துவ காப்பீடு திட்டம் மூலம், மூன்று மணி நேரத்தில் மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளனர், ஸ்டான்லி அரசு மருத்துவர்கள்.
நாகர்கோயிலை சேர்ந்தவர் ராஜதுரை, 27. தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர். இவரது கணையத்தில் சேர்ந்த கற்கள், தனியார் மருத்துவமனையில், கடந்த மாதம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

ரத்த வாந்தி: சிகிச்சை முடிந்து சில நாட்களிலேயே, ராஜதுரை ரத்த வாந்தி எடுக்கத் துவங்கினார். அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனைக்கே மீண்டும் செல்ல, அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர்.

ஆஞ்சியோகிராம் சிகிச்சை: ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று ராஜதுரையை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுகுடலுக்கு அருகே மெல்லிய ரத்தகுழாயில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியாது என்பதை உணர்ந்து, ஆஞ்சியோகிராம் முறையில் இன்டர்வென்ஷனல் ரேடியோலஜிஸ்ட் மூலம் சிகிச்சை தர திட்டமிட்டனர். ஆனால், ரத்தக்குழாயில் ஏற்பட்ட கசிவை தடுக்கத் தேவையான "பிளாட்டினம் காயல்ஸ்' என்ற உபகரணம் ஸ்டான்லியில் இல்லை. அதை மருத்துவமனை மூலம் வாங்க வேண்டும் என்றால், அதுவரை நோயாளி உயிரோடு இருப்பார் என உறுதி கூற முடியாது என்ற நிலை ஏற்பட்டது. எனவே, வெளியே இருந்து "பிளாட்டினம் காயல்ஸ்' வரவழைக்கப்பட்டது.

கை கொடுத்த காப்பீடு: உடனடியாக ராஜதுரைக்கு, தமிழக அரசின் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ரத்தகுழாயில் ஏற்பட்ட கசிவு"பிளாட்டினம் காயல்ஸ்' மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர், ஸ்டான்லியில் மட்டுமே உள்ள, நவீன டி.எஸ்.ஏ., (டிஜிட்டல் சப்ட்ராக்சன் ஆஞ்சியோகிராம்) கருவி மூலம், கசிவு ஏற்பட்ட மெல்லிய ரத்த குழாயை கண்டுபிடித்து "பிளாட்டினம் காயல்ஸ்' மூலம் சரி செய்யப்பட்டது. தற்போது தற்போது ராஜதுரை நலமாக உள்ளார். மூன்று மணி நேரத்தில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து ஸ்டான்லி முதல்வர் கீதாலட்சுமி கூறியதாவது: இதுபோன்ற சிகிச்சை ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் ஐந்து இன்டர்வென்ஷனல் ரேடியோலஜிஸ்ட் மட்டுமே உள்ளனர். அதில் ஸ்டான்லியில் உள்ள மருத்துவர் சுகுமார், இத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஸ்டான்லியில் மட்டுமே உள்ள ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஆஞ்சியோகிராம் கருவி, 2007ல் நிறுவப்பட்டது. இதன் மூலம், ஆயிரத்து 500 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளோம்,' என்றார்.

நன்றி தினமலர்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!