சென்னையிலும் விரைவில் மினி பஸ்கள் அறிமுகம்!

சென்னை: தமிழகம் முழுவதும் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற மினி பஸ்கள், முதல்முறையாக சென்னையிலும் இயக்கப்படவுள்ளன.

சட்டசபையில் இன்று போக்குவரத்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்த பின் அந்தத் துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ. 548 கோடி செலவில் 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும். இவை சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை மாவட்டங்களில் இயக்கப்படும்.

சென்னை மாநகரில் பஸ் வசதி அளிக்க முடியாத சிறிய பகுதிகளில், அங்கு வசிக்கும் மக்களுக்காக அவர்கள் வசிக்கும் பகுதிகளையும், அருகில் உள்ள பஸ் நிலையம், ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் முதல்முறையாக 100 மினி பஸ்கள் மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும்.

அனைத்து மாவட்ட தலைநகரில் இருந்தும் சென்னைக்கு வால்வோ ஏசி பஸ்கள் இயக்கப்படும். உள்ளது. முதல்கட்டமாக இந்த நிதியாண்டில் கோவை, மதுரை ஆகிய இடங்களில் இருந்து வால்வோ ஏசி பஸ்கள் இயக்கப்படும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது 19,167 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது 20,000 ஆக உயர்த்தப்படும்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்போது 3,140 ஆக உள்ள வழித்தடங்கள் இந்த ஆண்டில் 3,500 ஆக உயர்த்தப்படும். தற்போதுள்ள 8 போக்குவரத்து கழகங்கள், 10 ஆக உயர்த்தப்படும் என்றார்.

சட்டசபை கூட்டத்தொடர் 16ம் தேதி வரை நீட்டிப்பு:

இந் நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் மே 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பேரவைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முன்னதாக மே 12ம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது

Comments

  1. இருக்கிற போக்குவரத்து நெரிசலில் 10 நிமிடத்தில் போகிற இடத்துக்கு அரை மணி நேரம் ஆகிறது... இதுல இது வேறையா....

    உங்கள் பிளாக் இணையதளத்தின் செய்திகள் ஆயிரக்கணக்கான வாசகர்களை எளிதில் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் செய்திகளின் லிங்கை உடனுக்குடன் இணைத்திடுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!