தளிர் ஹைக்கூ கவிதைகள்! 10

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

உள்ளம் குமுறலில்
வார்த்தையில் வெடிக்கிறது!
கோபம்!

பறவைகளின் இசையில்
பயிர்களின் நாட்டியம்!
மழை வருகை!

வசதிகள் அதிகமாகையில்
சுருங்குகிறது!
மனசு!

ஒடுங்கும் முதுமையில்
ஓடும் குழந்தையாகிறது!
மனசு!

வேண்டுதல் இன்றி
மொட்டை போட்டன மரங்கள்!
இலையுதிர்காலம்!

குளத்தில் 
கோலம் போட்டது
மழைத்துளி!

காசைக்கொடுத்து
சிறையில் தள்ளுகிறார்கள்!
நர்சரி பிள்ளைகள்!

முகத்தை திருப்பிக்கொண்டது
முழுநிலவு!
அமாவாசை!
மஞ்சள் வெயில்
மலர் சொறிந்தன!
வண்ணத்து பூச்சிகள்!

முன்னறையில்
முத்தச் சத்தம்!
பல்லி!

மூடி மறைத்தும்
முற்றத்தில் எட்டிப்பார்த்தது
முழுநிலா!

கன்று ஈன்றதும்
வெட்டப்படுகிறது!
வாழை!

 


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை அள்ளி வீசுங்கள்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2