பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 13



பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 13

உங்கள் ப்ரிய “பிசாசு”

முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் செல்வியும் முகேஷின் நண்பன் ரவியும் திடீர் திடீர் என நடவடிக்கைகளில் மாறுபாடு அடைகின்றனர். இருவருக்குமே பேய் பிடித்துள்ளது என்று மற்றவர்கள் கூறுகிறார்கள் திருப்பதிக்கு ரவியை அழைத்து செல்ல அங்கு காணாமல் போகிறான் ரவி. அதேசமயம் முகேஷை அவனது சித்தப்பா சந்திரன் என்ற ஆட்டோ டிரைவர் மூலம் அழைக்கிறார்.
முந்தைய பகுதிகள் படிக்காதவர்களுக்கு  லிங்க்

http://thalirssb.blogspot.in/2012/10/12.html  பகுதி 12

இனி:
    ஆட்டோ சீரான வேகத்தில் திருச்சானூர் செல்லும் சாலையில் பயணித்து கொண்டிருந்தது. முகேஷ் மவுனத்தை கலைத்து பேச ஆரம்பித்தான். சந்திரன் உங்களுக்கு எப்படி எங்க சித்தப்பாவை பழக்கம்? உங்களுக்கு தமிழ் தெரியுமா?
   நான் தமிழ் நாடுதான் தம்பி! உங்க சித்தப்பாவை போல பிழைப்புக்காக திருப்பதி வந்தவன்!
   அப்ப நீங்க என்னை தெலுங்குல  கூப்பிட்டீங்க?
   இங்க வந்து ஒரு இருபது இருபத்தைஞ்சி வருஷம் ஆகி போச்சு தம்பி! இங்க இருக்கறவங்களோடு பழகி பழகி தமிழ் மறந்து போச்சு! எல்லாம் பிழைப்புக்கதான் தம்பி!
   உங்க கதை சுவாரஸ்யமாத்தான் இருக்கு! ஆமா! இதென்ன மூணு சட்டை போட்டுகிட்டு இருக்கீங்க? கழுத்துல வேற பவழமணி! நான் பயந்தே போயிட்டேன் தெரியுமா?
     எனக்கு கொஞ்சம் குளிர் தாங்காது தம்பி! ரெண்டு மூணு நாளா காய்ச்சல் வேற! அதுக்கு மந்திரிக்கத்தான் உங்க சித்தப்பு கிட்ட போனேன் அவருதான் நீங்க வர விசயத்தை சொல்லி போயி அழைச்சிகிட்டு வாடான்னு சொல்லிட்டாரு நான் தயங்கினேன் சாமி காய்ச்சலு! அதுக்கு மந்திரிக்கணும் என்றேன். ஒரு முறை முறைத்தவர் தன் கழுத்துல இருந்த இந்த மாலையை எடுத்து போட்டு போய் கூட்டிகிட்டு வா! உன் காய்ச்சலை நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டாரு!  அவரு பேச்சை மீற முடியாம கிளம்பி வந்துட்டேன்!
    ரியலி இது ரொம்ப மிராக்கிளா இருக்கு! நான் வர்ற விசயத்தை எங்க சித்தப்பா கிட்ட இன்ஃபர்ம் கூட பண்ணலை! ஆனா அவரா தெரிஞ்சிகிட்டு உங்களையும் அனுப்பி வைச்சிருக்காரு ரொம்ப இன்ட்ரஸ்டிங்க்கா இருக்கு!
   இதெல்லாம் அவருக்கு சாதாரணம் தம்பி! பெரிய பெரிய மினிஸ்டருங்க எல்லாம் அவர் அப்பாயின்ட் மெண்ட் கேட்டு காத்துகிட்டு இருக்காங்க! ஆனா அவரு அதுக்கெல்லாம் அடிபணிய மாட்டாரு அன்புக்குத்தான் அடிபணிவாரு!
   என்ன சந்திரன் ஒரே அடியா புகழறே?
  புகழ்ச்சி இல்ல தம்பி! இதுதான் உண்மை!
 அது சரி! நீ எப்படி சித்தப்பாவுக்கு பழக்கம்?
அதான் சாமி! அது பெரிய கதைன்னு சொன்னேனே!
எப்படியும் குஹாத்ரி போக ஒரு நாற்பத்தைந்து நிமிசமாவுது ஆகாது! அதுக்குள்ளே உன் ப்ளாஷ் பேக் முடியாதா?
  அவ்வளவு பெரிசெல்லாம் இல்ல தம்பி! சின்னதுதான்!
அப்ப சொல்லுங்க!
உங்க சித்தப்பாவை பார்க்க நிறைய பேரு வருவாங்க இல்லை! அப்படி வர்றவங்களை சவாரி அடிக்கிறதுதான் நம்ம வேலை! நான் பாட்டுக்கு கொண்ட பள்லிக்கு வந்து இறக்கி விட்டுட்டு காத்துட்டு இருப்பேன்! அவங்க மலை மேல போயி சாமிய பார்த்துட்டு வருவாங்க சில சமயம் சீக்கிரம் வந்துடுவாங்க! சில சமயம் லேட்டாகும். அதனாலே திரும்பி போயிட்டு வேற சவாரி கூட ஏத்திட்டு வருவேன். வெயிட்டிங் எல்லாம் பெரும்பாலும் ஒத்துக்க மாட்டேன். நான் பாட்டுக்கு சவாரியை இறக்கி விட்டுட்டு போயிகிட்டு இருப்பேன்.
 ஒரு ஏழெட்டு வருசம் முன்னாடி அப்படித்தான் ஒரு சவாரியை கூட்டிகிட்டு வந்தேன்.. அதுங்க பாவம் ரொம்ப ஏழைங்க! திரும்பி போகவும் அதுங்க கிட்ட காசு இருக்கறா மாதிரி தெரியலை! பார்த்தாலே பாவமா இருந்துச்சு! அவங்க கதைய கேட்கறச்சே! மனசு கேக்காம சரி சீக்கிரம் சாமிய போய் பார்த்துட்டு வந்துடுங்க நான் வெயிட் பண்றேன் என்றேன். அவங்களும் ரொம்பவும் சந்தோஷப்பட்டுகிட்டு சாமியை பார்க்க போனாங்க!
    அப்ப காலையில பத்து மணி இருக்கும்! எப்படியும் பன்னிரண்டு மணிக்கு வந்துடுவாங்கன்னு நானும் காத்துகிட்டு இருக்கேன்! அன்னிக்குன்னு பார்த்து காலையிலேயும் சாப்பிடலை! மதியம் சாப்பாடு எங்காவது வழியில பார்த்துக்கலாம்னு கட்டிகிட்டும் வரலை!  பசி உயிரை எடுக்குது! போனவங்க மணி ரெண்டாகியும் திரும்பலை!
   என்னடா இது இப்படி வந்து மாட்டிகிட்டோமே! ஏதாவது வாங்கி சாப்பிடலாம்னு பார்த்தா  சட்டை பையிலேயும் பைசா இல்லே! கூட்டிகிட்டு வந்ததுதான் முதல் சவாரி! அவங்க கிட்டேயும் போய் வந்து கொடுங்கண்னு தாராளமா சொல்லிட்டேன்! என்னடா பண்றதுன்னு அப்படியே முழிச்சிகிட்டு நிக்கறப்ப  ஒரு ஆளு வந்து கையில ஒரு பொட்டலத்துல சாப்பாட்டோடு நின்னான்.
    நீங்க தானே ஆட்டோ சந்திரன்! இதை உங்க கிட்ட கொடுக்க சொன்னாரு சாமி! என்று பொட்டலத்தை கொடுத்தான். ஒரே ஆச்சர்யமா போச்சு! பிரிச்சா உள்ளே சாப்பாடு!  என் பசியை அறிந்து போக்கின சாமியை உடனே பாக்கணும்னு தோணிச்சு! அதுவரைக்கும் அவரை நேரில பார்த்தது கிடையாது. எத்தனையோ சவாரிகளை இங்க கொண்டாந்து இறக்கி இருக்கேன்! ஆனா ஒரு முறை கூட மேல ஏறிப் போய் பார்த்தது கிடையாது. இன்னிக்கு கண்டிப்பா அவரை போய் பார்த்துடனும்னு தோணிச்சு! நினைச்சிகிட்டே சாப்பிட்டு முடிச்சேன்.  பின்னாலே இருந்து ஒரு குரல்! என்ன சந்திரன்? சாப்பாடு நல்லா இருந்துச்சா? இது போதுமா? இல்லே இன்னும் வேணுமான்னு ஒரு கேள்வியோட சாமிஜி நின்னுகிட்டு இருந்தார்.
    எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை! அப்படியே கண்கலங்க நின்னேன்! என்ன சந்திரன்? சாப்பாடு ரொம்ப காரமா இருக்கா? கண்ணெல்லாம் கலங்கி இருக்கே என்றவர் என்னை தட்டிக் கொடுத்தார்.
  பசி வேளைக்கு ஒரு புடி சாப்பிடனும் சந்திரன்? அன்னலட்சுமியை பகைச்சிக்க கூடாது! சரி போகலாமா என்றார் அவருடன் காலையில் நான் அழைத்து வந்தவர்களும் இருந்தனர். மூவரையும் அழைத்துக் கொண்டு அவர்கள் இடத்திற்கு சென்றேன். அங்கே சாமிஜி சில பரிகாரங்கள் செய்தார். பின்னர் அவரை திரும்பவும் இங்கே கொண்டு வந்து விட்டேன்.
  என் பசி அறிஞ்சி சாப்பாடு போட்ட அவரை என்னாலே மறக்க முடியலை! அதுக்கப்புறம் என் வாழ்க்கையில பல கஷ்டங்களை அவர் தீர்த்து வைச்சார்! இப்பவும் தீத்து வைச்சிகிட்டு இருக்கார் என்றார் சந்திரன்.
  முகேஷிற்கு எல்லாம் ஆச்சர்யமாக இருந்தது! இது வரை அவன் கொண்ட பள்ளிக்கோ குஹாத்ரிக்கோ வந்ததில்லை! சித்தப்பாவை சிறு வயதில் பார்த்திருக்கிறான். அவர் சின்ன வயதிலேயே தாத்தாவுடன் சண்டையிட்டு கொண்டு திருப்பதி வந்து விட்டதாகவும் பின்னர் இங்கு வந்து பெரிய மந்திரவாதியாக மாறிவிட்டதாகவும் கேள்விப்பட்டு இருக்கிறான். இப்போது நடப்பது எல்லாம் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இருபுறமும் வயல் சூழ்ந்த அந்த கிராம சாலையில் பல வளைவுகளை கடந்து கொண்ட பள்ளி அடிவாரத்திற்கு அந்த ஆட்டோ வந்து நின்றது.
     இது வரைக்கும்தான் தம்பி ஆட்டோ! இனிமே மலைப்பாதை மலை மேல ஏறனும் படிகள் இப்பத்தான் கட்டிகிட்டு வர்றாங்க! வாங்க போகலாம் என்று அழைத்தார் சந்திரன்.
    அவருடன் நடக்க ஆரம்பித்தான் முகேஷ் மலை ஏறுவதற்கு வசதியாக பாதை செதுக்கப்பட்டு கொண்டு இருந்தது மலைகளில் பல்வேறு மூலிகை செடிகள் முளைத்து ஒருவித ரம்மியமான வாசனை வந்து கொண்டிருந்தது. இரு புறங்களிலும் அடர்த்தியான மரங்கள் வளர்ந்திருந்தன. சிகப்பு நிறத்தில் பூக்கள் பூத்திருந்தன.
சில இடங்களில் நடப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது முகேஷிற்கு ஆனால் சந்திரன் லாவகமாக நடந்தார்.
   ஏறக்குறைய ஒரு அரை மணி நேர மலைப்பயணத்திற்கு பின் மலை உச்சியை அடைந்தனர். அங்கு ஒரு குகை இருந்தது. அதன் வாசலில் அவனது சித்தப்பா! கையில் ஒரு கொத்து வேப்பிலை!  அவர் எதிரே ஒரு பெண். அவள் முகம் பயங்கரமாக இருந்தது.
     உம் பேரு ஏமி?
விசாரித்து கொண்டிருந்தார் சித்தப்பா.
 முகேஷ் சந்திரனை பார்த்து கேட்டான் . என்ன நடக்குது இங்கே?
சந்திரன் வாயில் கைவைத்து சும்மா இருக்கும் படி கூறினார். பின்னர், நாம் அப்படி ஓரமா இருந்து பார்க்கலாம் என்றார். அவனுக்கு தமிழில் நடப்பவைகளை கூறினார்.
  உன் பேரு என்ன?
சொல்ல மாட்டேன்!
சொல்லறியா? இல்லே இந்த வேப்பிலையாலே ஒரு அடி கொடுக்கட்டுமா?
 சொல்றேன்! சொல்றேன்!
 சொல்லு!
சொர்ணம்மா!
சொர்ணம்மா ஏன் இந்த பொண்ணை பிடிச்சிகிட்டு இருக்கே!
எனக்கு பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கேன்!
 அட பிடிச்சிருந்தா பிடிச்சிப்பியா? ,மரியாதையா கீழே இறங்கி போயிடு!
 போக மாட்டேன்!
எது கொடுத்தா  போவே!
கோழி வேணுமா? சாராயம் வேணுமா?
எதுவேணும்?
உம்! உம்! கும்முடிகாய்? ஆத்திரமும் கேலியுமாக சொன்னாள் அந்த பெண்.
முகேஷ் இப்போது கேட்டான்! கும்முடிகாயா? அது என்னது!
அங்க நடப்பதை பார் தெரியும் என்றார் சந்திரன்!
ஒரு பெரிய பூசணிகாய் அங்கு கொண்டு வரப்பட்டது.  அட இது தானா?
 சொர்ணம்மா! இந்தா நீ கேட்ட பூசணிக்காய்.
உம்! உம்!
என்ன உம்! நீதானே இந்த கும்முடிகாய்லே போறேன்னு சொன்னே! மரியாதையா போயிடு! இல்லே உன்னை பிடிச்சு பாட்டில்ல அடைச்சி சமுத்திரத்துல வீசிடுவேன்! அப்புறம் உனக்கு விடுதலையே கிடையாது! உம் இறங்கு!
  ம்! முடியாது! இவளை விட முடியாது!
 முடியாதா! நீதானே கும்முடிகாய்லே போறேன்னு சொன்னே!
அப்ப இறங்கு! இல்லே!  ஆவேசமாக கூறியபடி ஒரு பிடி விபூதியை அந்த பெண்ணின் மீது போட்டார் சாமி!
மறுவினாடி! அந்த பூசணிக்காய் அப்படியே வெடித்து சிதறியது!  ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த அந்த பெண் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
ஒருவித திக்பிரமையோடு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான் முகேஷ்!
                                             மிரட்டும்(13)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

டிஸ்கி} நேற்று என் மனைவியை பிரசவத்திற்கு மருத்துவ மனையில் சேர்த்ததாக கூறினேன். பரிசோதித்து இன்னும் இரண்டு முதல் நான்கு நாட்கள் ஆகும் என்று அனுப்பி விட்டார்கள். ஓரளவு நிம்மதி!  அதனால் வழக்கம் போல பதிவு! நன்றி!
   



Comments

  1. விரைவில் மகிழ்ச்சியான செய்தியை எதிர்ப்பார்க்கிறேன்... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!