தமிழன்னைக்கு சிலை தேவையா?


தமிழன்னைக்கு சிலை தேவையா?


நம்ம தங்கத்தலைவி நூற்று பத்தாவது விதிப்படி தினம் தினம் புதுப் புது அறிவிப்புக்களை வெளியிட்டு மக்களை குஷிப்படுத்தறாங்க?!! அந்த வகையில இன்னிக்கு சதம் அடிச்சிட்டாங்களாம்! பேரவைத்தலைவருக்கு பெருமை பிடிபடலை! எங்க தங்க தலைவி சதமடிச்சிட்டாங்கன்னு ஏதோ ஐ பி எல் டி 20 ல சதம் அடிச்ச மாதிரி பீலிங் பண்ணி புகழ்ந்துகிட்டு இருக்காரு அவரு.
   அது கிடக்கட்டும்! இன்னிக்கு அறிவிப்புல தமிழன்னைக்கு 100 கோடியில மதுரையில சிலை வைக்க போறாங்களாம் அம்மா! ஆமா தெரியாமத்தான் கேக்கறேன்! தமிழ் அன்னைன்னு ஒருத்தர் இருக்காங்களா? இது கடவுள் இருக்கா இல்லையாங்கறா மாதிரி ஒரு கேள்வி? தமிழ் ஒரு மொழி பாரம்பர்யமான மொழி செம்மொழி பல சிறப்புக்களை கொண்டது அவ்வளவுதான். மத்தபடி இதுவும் ஒரு லாங்க்வேஜ் அவ்வளவுதானே! என்னடா இவன் இப்படி பேசறானே கோபிச்சிக்க கூடாது.
   தமிழ் நமது தாய்மொழி! பல இலக்கண இலக்கிய வளங்களை உடையது! ஆனால் தமிழுக்கென்று ஒர் அன்னையும் அதற்கு சிலையும் தேவையா? தமிழ் வளர்ச்சிக்கு இந்த நூறு கோடி ரூபாயை பயன்படுத்தலாமே! தமிழ் நாட்டில் தமிழ் கல்வி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. கிராமத்து குழந்தைகள் கூட மம்மி டாடி என ஆங்கில மீடியத்திற்கு தாவிக் கொண்டிருக்கிறது. தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபுகள் சுத்தமாக மறக்கடிக்கப்படுகின்றன.
     இன்னும் சொல்லப்போனால் பள்ளிகளில் தமிழாசிரியர் பற்றாக்குறையாக இருக்கிறது. தமிழ்வழி கல்வி என்பதே வேப்பங்காயாக கசக்கிறது. தமிழில் படித்தவர்களுக்கு எந்த சலுகையும் முன்னுரிமையும் வழங்கப்படுகிறதா? இல்லை! தமிழை வளர்க்க வேண்டுமானால் கிராமங்கள் தோறும் தமிழ் நூல்கள் கொண்ட நூலகங்கள் அமைக்கலாம். தமிழின் இலக்கண இலக்கியங்களை மின்னூலாக்கலாம்.
   தமிழ்வழி கல்வி பயில்பவர்களை ஊக்குவிக்கலாம்.  இதை எல்லாம் விடுத்து தமிழ் அன்னைக்கு சிலை வைத்தால் காக்கா கக்கா போகத்தான் உபயோகப்படுமே தவிர வேறு ஒன்றுக்கும் பலன் இல்லை. அது நம் வீட்டு காசு என்பதை கழக கண்மணிகள் உணர வேண்டும். முதலமைச்சருக்கு இது போன்ற ஆலோசனைகள் வழங்கும் புத்தி சிகாமணி யார் என்று தெரியவில்லை!

    முதலில் இருட்டில் இருக்கும் தமிழகத்திற்கு ஒளி கொடுங்கள்! அப்புறம் சிலைவைக்கலாம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சரியாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete
  2. அரசின் முடிவு

    ReplyDelete
  3. உலகில் மனிதன் முதன் முதலில் தோன்றிய இடம் குமரிக் கண்டம் என்று அராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அதாவது இன்றைய கன்னியாகுமாரிக்கும் தெற்கே, லெமூரிய என்ற கண்டம் இருந்தது அங்குதான் முதன் முதலில் மனிதன் தோன்றினான் என்று . அம் மனிதன் பேசிய முதல் மொழி தமிழ் மொழி அய்யா. இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய உலகின் முதல் மொழி தமிழ் அய்யா. இத்தகு தமிழ் மொழியின் பெருமையினை நாம் இன்னும் சரியாக உணராமல் தான் உள்ளோம். நமது பெருமையினை நாமே பேசாவிட்டால், பிறகு யார் பேசுவார்கள். நமது பெருமை நமக்கே தெரியாவிட்டால், பிறகு மற்றவர்க்கு எப்படி தெரியும்.
    எனவே மொழியின் வளர்ச்சிக்காகவும், மொழியுன் பெருமையினை உணர்த்தவும் சில செயல்களை செய்ய வேண்டியது அவசியாம் என்று கருதுகின்றேன் அய்யா. கட்சி சார்பற்ற என் கருத்து அய்யா இது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2