கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 5

ஜோக்ஸ்!


1.      மூணு வருசமா டிமிக்கி கொடுத்திட்டு இருந்த ஒரு திருடனை மடக்கி பிடிச்சிட்டீங்களாமே அப்புறம்?
அப்புறம் என்ன? மூணு வருஷ மாமூலெல்லாம் வாங்கிட்டப்புறம்தான் விட்டோம்!

2.      அந்த டாக்டர்கிட்ட போனா டெஸ்ட் பண்ணி பார்க்கமா மருந்தே கொடுக்க மாட்டாரு!
     நல்ல விசயம்தானே!
   அட! நீவேற  அவர் டெஸ்ட் பண்றது பேஷண்டோட பர்ஸை!

3.      மன்னர் எதற்கு திடீரென மொட்டைப் போட்டுக் கொள்கிறார்?
எதிரி மன்னன் அவரது முடியை இறக்கிவிடுகிறேன் என்று சவால்விட்டானாம்.

4.      தலைவர் எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் போறார்?
வாக்கு வங்கி தொலைஞ்சி போச்சுன்னு கம்ப்ளைண்ட் பண்ணப்போறாராம்!


5.      எங்க வீட்டுல நான்    கண் அசைச்சா போதும் சாப்பாடு ரெடியாயிடும்!
எங்க வீட்டுல நான் மாவாரைச்சா போதும் சாப்பாடு ரெடியாயிரும்!

6.      தலைவர் ஏன் பதவி ஏற்பு விழாவை புறக்கணிக்கிறதா அறிக்கை விடறார்?
அவருக்கு அழைப்பே வரலைங்கிறதை சமாளிக்கத்தான்!

7.      தலைவர் எதுக்கு இப்ப கூட்டணி தர்மம் பற்றி பேசறார்?
ஒரு மினிஸ்டர் போஸ்டாவாது தர்மமா கிடைக்காதாங்கிற நினைப்புலதான்!

8.      அந்த மினிஸ்டரோட பொறுப்பை ஒவ்வொன்னா குறைச்சு அப்புறம் பதவியை பிடுங்கினாங்களே ஏன்?
அவரு படிப்படியா முன்னேறினவராம்! படிப்படியா இறக்கிவிடுறாங்க!


9.      சாந்தியைத்தேடிப்போனாரே ஆன்மீக குரு கிடைச்சுதா?
சாந்தி கிடைக்கலை வசந்தி தான் கிடைச்சாங்க!

10.  சரக்கடிச்சுட்டு நீங்க பேசறப்ப ஒரே வெறுப்பா வருதுங்க!
நான் சரக்கடிக்காம இருக்கிறப்ப நீ பேசறது எனக்கு கடுப்பா இருக்கே!

11.  துரத்தி துரத்தி ஒரு பொண்ணை லவ்பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டியே எப்படி இருக்கே?
இப்ப அவ என்னை விரட்டி விரட்டி அடிக்கிறாப்பா!

12.  அவர் ஏன் கல்யாணத்துக்கு பூச்சி மருந்து டப்பாவோட போறார்?
கல்யாணங்கிறது ஆயிரங்காலத்து பயிர்னு யாரோ சொன்னாங்களாம்!

13.  தலைவர்  அண்டர்கிரவுண்ட்ல வீடு கட்டியிருக்கார் தெரியுமா?
    சுரண்டி சம்பாரிச்சு கட்டுன வீடுன்னு சொல்லு!


14. மன்னரின் வாள் எடை ஐந்து கிலோவாமே?
   எப்படித்தெரியும்?
   பேரிச்சம் பழக் கடைக்காரன் சொன்னான்!

  15. மந்திரியாரே! மனம் உளைச்சலாக இருக்கிறது!
ராணியாருடன் உல்லாசப்பயணம் சென்றுவருகிறீர்களா மன்னா?
  வெந்தபுண்ணில் வேலைப்பாய்சாதீர்கள் மந்திரியாரே!

16. உங்க பொண்ணுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை பிரதமர் ஆகிறதுக்கும் வாய்ப்பு இருக்கு!
   அடடே!அரசியல் வாதியா?
 இல்லே ஸ்டேஷன்ல டீ விக்கிறவர்!

17. தலைவருக்கு வரின்னாலே சுத்தமா பிடிக்காது!
  அதுக்காக முகவரிக்கு வரிவிலக்கு அளிக்கணும்னு அறிக்கை விடறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

18. வாங்கின கடனை கேட்டா ஏம்ப்பா இவ்வளோ சில்லறையை கொண்டுவரே!
  நீங்கதானே நாணயமா திருப்பித்தரணும்னு சொன்னீங்க!

19. நம்ம தலைவர் சுத்த சைவம்!
   அதுக்காக ஜாமீனை கூட வேணாம்னு சொல்றது நல்லா இல்லை!


 20 டாக்டர் என் உடம்புல  இருக்கிற காயத்தை பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது?
உங்க வீட்டுபூரிக்கட்டை நல்ல வெயிட்டுன்னு தோணுது!

21.      ஏரியாவில் க்ரைம் ரேட் குறைஞ்சு போனதுக்கு போலீஸ் வருத்தப்படுதா ஏன்?
அவங்க மாமூல் ரேட்டும் குறைஞ்சு போவுது இல்லே!

22.      எங்க வீட்டுல சண்டையில எப்பவும் மனைவியோட கைதான் ஓங்கி இருக்கும்!
எங்கவீட்டுல என்னோட முகமும் வீங்கி  இருக்கும்!

23.      மன்னர் ஏன் திடீர்னு பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்னு பாடறாரு?
அரண்மனை கஜானா காலியானதை சிம்பாலிக்கா சொல்றாராம்!

24.      அன்பே கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? ரெண்டுமாதம் தள்ளிப்போடலாமே!
    ரெண்டுமாசம் தள்ளிப்போனதாலதான் அவசரப்படறேன்!

25.      ஏர் ஹோஸ்டல் பிகரை கரெக்ட் பண்ணியே என்ன ஆச்சு?
    அவள் பறந்து போயிட்டா!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
   





Comments

  1. //ரெண்டுமாசம் தள்ளிப்போனதாலதான் அவசரப்படறேன்!//
    ஆகா அப்படியா

    ReplyDelete
  2. ஜோக் 20: நம்ம மதுரைத் தமிழன் தான் நியாபகத்துக்கு வருகிறார்....

    ReplyDelete
  3. நல்ல நகைச்சுவை..... ரசித்தேன் தளிர் சுரேஷ்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரர்
    அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. சரவெடி மாதிரி சிரிப்பு வெடி. தொடருங்கள்.

    ReplyDelete
  5. அவ பறந்து போன ஜோக் "ஹை" லைட்.. ஹிஹிஹி..

    ReplyDelete
  6. இவ்வளவு நல்ல ஜோக்குகளையும் ஒரு சேர படித்து ரொம்ப நாளாகிடிச்சி ! ( விகடன்ல கூட இப்பல்லாம் இவ்ளோ கிடையாது ! )

    ( நேரமிருப்பின் எனது வலைப்பூவுக்கு வருகைதந்து உங்களின் கருத்துகளை பதியுங்கள். )

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  7. நல்ல தொகுப்பு நண்பரே..
    தொடர்க..
    படிப்படியாக இறங்கும் அமைச்சர் ... ஹ ஹா ஹா
    http://www.malartharu.org/2013/11/jrc-seminar2013.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!