குழந்தைகள் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்!

 கிருஷ்ண ஜெயந்தி விரதம்!


கிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். 

அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. 
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும். தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை, பாசிப் பருப்பு பாயாசம் போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். 
     நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம். 

தஹிகலா என்றால் என்ன தெரியுமா? பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணையையும் கலப்பது என்பர். வரஜபூமியில் கோபியர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.
 

மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணை மிகவும் பிடித்தமானது என நினைத்து அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஆனால் உண்மையில் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணையை விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள்.
 

தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணையைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். அவ்வாறு எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.
 


மக்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணை பால் போன்ற பலவிதமான பண்டங்களை உண்ணுவார்கள். பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் வ்ரஜபூமியில் ஸ்ரீகிருஷ்ணன் தனது உணவுடன் தன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள்.
 

இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
 


கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி சூத்திரம்
  • கோகுலாஷ்டமி (கிருஷ்ணாஷ்டமி) விரதம் வேறு ஸ்ரீ ஜெயந்தி வேறு
  • கோகுலாஷ்டமி (கிருஷ்ணாஷ்டமி) விரதம் சந்திரமாதமான சிராவண பகுள அஷ்டமி திதியே பிரதானம்
  • அஷ்டமி நள்ளிரவில் வியாபித்திருப்பது மிக முக்கியம்
  • இந்த கோகுலாஷ்டமி (கிருஷ்ணாஷ்டமி) விரதம ஆடி (கடகம்) அல்லது ஆவணி(சிம்மம்) மாதத்தில் வரும்
  • ஆவணியில் வரும் பொழுது ஸ்ரீ ஜெயந்தியுடன் சேர்ந்து அல்லது முன்னாள் அல்லது பின்னாளில் வரும்
ஸ்ரீ ஜெயந்தி சூத்திரம்

  • அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரம், ஹர்ஷண யோகம், ரிஷப லக்னம் சேர்க்கை மிக முக்கியம்
  • சந்திர மாதமான சிராவண மாதத்தில் அல்லது பாத்ரபத மாதத்தில் வரும்
  • சிராவண மாதத்திற்கு அதிக முக்கியத்துவம் ஆயினும் சிராவண மாதத்தில் அஷ்டமி ரோகினி சேர்க்கை இல்லை எனில் பாத்ரபத மாத்தில் செய்யலாம்
  • சூரியன் நிற்கும் சிம்ம மாஸம் தவிர கடகம்(ஆடி), கன்னி(புரட்டாசி) மாதங்களில் செய்யக்கூடாது.
  • சிராவண மாதத்தில் அல்லது பாத்ரபத மாதத்தில் அஷ்டமி, ரோகினி சேர்க்கை இல்லை என்றால் அந்த வருடம் ஸ்ரீ ஜெயந்தி இல்லை !
வைகானஸ ஸ்ரீ ஜெயந்தி சூத்திரம்
  • ஸ்ரீ ஜெயந்தி சூத்திரம் இதற்கு பொருந்தும் ஆயினும்
  • ரோகினிக்கு கார்திகை தொடர்பு, அஷ்டமிக்கு சப்தமியின் தொடர்பு இருக்கக்கூடாது.
பாஞ்சாரத்திர ஸ்ரீ ஜெயந்தி சூத்திரம்
  • ரோகினிக்கு கார்திகை தொடர்பு, அஷ்டமிக்கு சப்தமியின் தொடர்பு இல்லையெனில் மிகவும் விசேஷம்
  • அஷ்டமி முடிவு காலமும், ரோகினி முடிவு காலமும் உதயத்தில் இரண்டு நாழிகை இருப்பின் அன்று தான் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (ஸ்ரீ வைஷ்ணவ ஜெயந்தி) ஆகும்
     என் மகள் வேத ஜனனி கிருஷ்ணர் வேஷத்தில்
இந்த வருடம் வரும் ஞாயிறன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. குழந்தைகளை மகிழ்விக்கும் இந்த விழாவை கொண்டாடி கண்ணன் அருளினை பெறுவோம்!

(தகவல்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை)
நன்றி: தினகரன், மாலைமலர், புரோகிதர் இணைய தளங்கள்


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. தகவலுக்கு நன்றி! ஸ்வீட்ஸ், காரம் பலகாரம் செய்தால் "பார்சல்"!

    ReplyDelete
  2. உங்கள் மகள் வேத ஜனனி போட்டோவில் நன்றாக இருக்கிறாள் வாழ்த்துக்கள். ஆனால் ? குழலின் ஓசைதான் கேட்கவில்லை.

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.
    மிகஅருமையாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் எல்லாம் அழகு பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. கிருஷ்ணரின் பிறந்த நாள் பதிவு அழகு! அருமை! கிருஷ்ணர் அருள்புரிவானாக!

    ReplyDelete
  5. தங்கள் மகள் வேத ஜனனியின் கிருஷ்ணர் வேட போட்டோ மிக அருமை

    ReplyDelete
  6. நல்ல தகவல்கள், படங்கள் அருமை. நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!