தளிர் சென்ரியு கவிதைகள் 9

தளிர் சென்ரியு கவிதைகள் 9


எட்ட முடியாத வளர்ச்சி!
ஏக்கத்தில் மக்கள்!
விலைவாசி!

உழைப்பவனையும்
கெடுக்கிறது!
நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம்!

கோயில் இல்லாத ஊரிலும்
குடியிருக்கிறது!
டாஸ்மாக்!

போதை ஏற்றியே
பாதை அமைத்துக்கொள்கின்றன!
அரசாங்கங்கள்!


விலைபோகும் வேட்பாளர்கள்!
களை இழக்கிறது
தேர்தல்!

அரசியல் விளையாடுகையில்
அழிக்கப்படுகிறது
விளையாட்டுக்கள்!

வெள்ளத்திலும்
வெல்லமாய் அரசியல்!
காஷ்மீர்!


ஊழலுக்கு நீர்பாய்ச்ச
உருட்டப்படுகிறது
நேர்மையான அதிகாரிகளின் தலைகள்!

கனிமத்திலும் மினிமம்!
கமிஷன் அமைத்தது
நீதிமன்றம்!

யார்வீட்டு எழவோ
நம் வரவேற்பரையில் துக்கம்!
டீவி சீரியல்!

இனிமையாக
கொல்லுகின்றன
வெளிநாட்டு குளிர்பானங்கள்!

அள்ளிக்கொண்டே  இருக்கிறார்கள்!
தள்ளிக்கொண்டே போகிறது!
நீர்மட்டம்!

மதிப்பிழந்த ரூபாய்!
மலையுச்சியில்
விலைவாசி!

பொட்டல்காடுகளிலும் முளைக்கிறது
புது நாற்றுக்கள்!
பொறியியல் கல்லூரிகள்!

உறுதியில்லா நம்பிக்கையில்
ஊசலாடுகின்றது
மீனவர் வாழ்க்கை!

அடுத்த நொடியை அறியாதவன்
கணிக்கின்றான் எதிர்காலம்!
ஜோஸ்யன்!


அண்ணாவுக்கு நாமம் சாற்றியபின்
 அதிவேகமான வளர்ச்சி!
திராவிடக் கட்சிகள்!

சகாயம் செய்ய மறுப்பு!
காயம் செய்த அரசியல்!
சகாயம் ஐ.ஏ.எஸ்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. வணக்கம்

    நாட்டு நடப்புக்ளை சொல்லும் விழிப்புணர்வுக் கவிதை கண்டு மகிழ்ந்தேன்...பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நடப்பு அவலங்கள் அத்தனையையும் ஹைக்கூக்களாக அப்படியே சொல்லிவிட்டீர்கள் சார்.. சூப்பர்...

    ReplyDelete
  3. கவிதைகள் அருமை நண்பரே...

    ReplyDelete
  4. மிக அருமையான கவிதை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. அருமையான கவிதைகள்.... பாராட்டுகள்.

    ReplyDelete
  6. அருமை. அருமை. அதுவும் கடைசி பத்தி மிக அருமை.

    ReplyDelete
  7. சுரேஷ் மிக அருமையாக சென்ரியூ எழுதுகின்றீர்கள்! கலக்குகின்றீர்கள்!

    ReplyDelete
  8. பொட்டல்காடுகளிலும் முளைக்கிறது
    புது நாற்றுக்கள்!
    பொறியியல் கல்லூரிகள்!

    உறுதியில்லா நம்பிக்கையில்
    ஊசலாடுகின்றது
    மீனவர் வாழ்க்கை!

    அடுத்த நொடியை அறியாதவன்
    கணிக்கின்றான் எதிர்காலம்!
    ஜோஸ்யன்!

    சூப்பர்!

    ReplyDelete
  9. ஜோதிடன் குறித்த வரிகள் நிஜமானவை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!