தளிர் ஹைக்கூ கவிதைகள்!

 தளிர் ஹைக்கூ கவிதைகள்!

1.   வாழ்க்கையை துவக்க
வாழ்விழந்தது வாழை!
கல்யாணச் சாவு!

2.   கண்ணாடி சட்டங்களில்
அடைபட்டு கிடக்கிறது
 முன்னோர்களின் பிம்பம்!


3.   நகரவில்லை!
நுகரச்செய்தது
மலரின் மனம்!

4.   மோதல் வெடிக்கையில்
விலகிப்போனது மழை!
இடி!

5.   பிரிந்து சென்ற பின்னும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது
நினைவுகள்!

6.   மலர்ப்பாதை
நடக்க வழியில்லை!
மரண ஊர்வலம்!

7.   இரும்புக் காளான்கள்
ஈர்த்தன உலக நிகழ்வுகளை!
தொலைக்காட்சி ஆண்டெனா!


8.   கரி படிந்த பூமி
முகவரி தந்தது
நிலா!

9.   முகம் காட்டாமல்
சுற்றி வருகிறது!
நினைவுகள்!

10.  மரங்களின் பின்னே
ஒளிந்து விளையாடியது!
தூரத்து மின்விளக்கு!

11. விழுகிறது!
எழுவதில்லை!
நிழல்!

12. அணைத்தவுடன்
பற்றிக் கொள்கிறது!
குளிர்!

13. ஓடி விளையாடிய மேகங்கள்!
ரசித்துக் கொண்டிருந்தது
நிலா!

14. மகிழ்ச்சியில் இரைத்தார்கள்
மங்கல அரிசியை!
திருமணம்!

15.  சுவைக்க வில்லை!
இனித்தது!
மழலை மொழி!

16. வியர்த்த பூக்கள்
     விசிறிவிட்டன வண்ணத்துப்பூச்சிகள்!
    காலைப்பனி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!