இந்த வார பாக்யாவில் என் ஏழு ஜோக்ஸ்!

இந்த வார பாக்யாவில் என்  ஏழு ஜோக்ஸ்!  

  பாக்யா இதழில் எனது படைப்புக்கள் வெளியாகி வருவது நம் நண்பர்கள் அறிந்த ஒன்று. இந்த வாரமும் என்னுடைய ஏழு ஜோக்ஸ்கள் வெளியாகி என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டது.

  பாக்யா இதழில் வெளிவந்த ஜோக்ஸ்களை தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுவில் ஜான் ரவி சார் பகிர்ந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். குழு தோழர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து ஊக்கப்படுத்தினர்.

  பாக்யா இதழ் எங்கள் பகுதியில் கிடைப்பது இல்லை. தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர் பத்திரிக்கைகளில் வரும் குழுவினரின் படைப்புக்களை ஸ்கேன் எடுத்து குருப்பில் பதிவிட்டு வாழ்த்து தெரிவிப்பது மிகவும் உதவியாக உள்ளது.

   புதுப்புது எழுத்தாளர்களை ஊக்குவித்து வரும் பாக்யா குழுமம் என் படைப்புக்களை தொடர்ந்து வெளியிட்டு ஆதரித்து வருவதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். பாக்யா ஆசிரியர் திரு பாக்யராஜ், பொறுப்பாசிரியர், சித்தார்த், மற்றும் ஆசிரியர் குழுவினர், தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமம், பூங்கதிர் சார் மற்றும் வலையுலக நண்பர்கள் , என் பெற்றோர், மனைவி, குழந்தைகள் சகோதர சகோதரிகள் அனைவரும் என்னை ஊக்குவித்து தொடர்ந்து எழுதச் செய்கிறார்கள். அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்!

   இந்த மாதம் அக்டோபர் மாத கார்டூன் ஆன்லைன் ஜோக்ஸ் போட்டியிலும் எனது ஜோக்ஸ் வெற்றி பெற்று பாராட்டுக்கள் பெற்றேன். கார்டூன் ஆன்லைன் இணையத்தில் வெளிவரும் இதழ். இதன் ஆசிரியர் நல்லமுத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையில் இதழ் நடத்தி பரிசுகள் தந்து வருகிறார்.  நம் தோழர்கள் கார்டூன் ஆன்லைன் தளத்திற்கு சென்று  ஆசிரியர் நல்லமுத்து சாரை ஊக்கப்படுத்தலாமே!
பாக்யா மற்றும் கார்டூன் ஆன்லைனில் வெளிவந்த ஜோக்ஸ்கள் கீழே!









தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் சுரேஷ்.

    ReplyDelete
  2. அருமை
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சுரேஷ். சந்தா கட்டினால் வீட்டுக்கு பத்திரிகை வந்து விடுமே....

    ReplyDelete
  4. உங்கள் காட்டில் மழை தான், ஒரே இதழில் இத்தனையுமா? பாக்யாவில் ஸ்பெஷாலிட்டியே புதியவர்களை ஊக்குவிப்பது தானே? தொடரட்டும் சிறப்பு.

    ReplyDelete
  5. ம்ம்ம் போஸ்ட் மார்ட்டம் சிரிப்பு மட்டும் கொஞ்சம் நெருடல், உயிரில்லாதவர் எப்படி டாக்டரிடம் கேட்க முடியும்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!